இந்தியாவுடன் இனி எந்நிலையிலும் போர் செய்யப் போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் தடுக்கவில்லை என்றால் அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கையை நோக்கி தள்ளப்படும் எனவும் , போர் செய்வதை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் பிரதமர்  எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இருநாடுகளும்  ஆயுத பலங்கள் கொண்டவை எனவே இருநாடுகளும் போர் புரிந்தால் அது உலகநாடுகளுக்கு பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எந்த பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வைக் கொடுக்காது என்பதை இந்தியாவுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். 

இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போர் செய்ய இணக்கம் காட்ட விரும்பவில்லை.  இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன. பதற்றம் அதிகரித்தால் உலக நாடுகள் அபாயத்தை நோக்கி தள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் லாகூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.