குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கடத்தப்பட்ட 91 வயது முதியவர்: புதைப்பதற்கு வீட்டினுள்ளே குழி தோண்டிய பணியாள்

Published By: J.G.Stephan

03 Sep, 2019 | 12:17 PM
image

இந்தியா, தெற்கு டெல்லியில்  வயதான தம்பதி  கிருஷ்ணன் கோஷ்லா (வயது 91), அவரது மனைவி சரோஜா கோஷ்லா (87) வசித்து வந்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த கிஷன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிருஷ்ணனின் வீட்டில் பணியாற்றி வந்தார்.  கிருஷ்ணன் வேலை வாங்கிய விதத்தால் வேலைக்காரன் கிஷன் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை பிற்பகலில் வீட்டு வேலைக்கு வந்த கிஷன்  கிருஷ்ணனையும் அவரது மனைவியையும் 5 பேரின் உதவியோடு அடித்து சுயநினைவு இழக்கச் செய்ததாகவும், பின்னர் டெம்போவில் குளிர் சாதனப் பெட்டியை எடுத்து வந்து அதனுள் கிருஷ்ணனை வைத்து கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம்,  சி.சி.டி.வி கெமராவில் சிக்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கிருஷ்ணன் கோஷ்லாவின் வீட்டிற்கு வெளியே டெம்போவில் குளிர்சாதன பெட்டியுடன் இருந்துள்ளார். வீட்டுக் காவலாளி   கிஷனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் குளிர்சாதன பெட்டியை பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் செல்வதாக கூறி உள்ளார்.

கடத்தப்பட்ட 91 வயதான கிருஷ்ணனையும், கடத்தியதாகக் கூறப்படும் கிஷனையும் பொலிசார் தேடிய நிலையில், குளிர்சாதன பெட்டியை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட டெம்போ பிரதீப் ஷர்மாவின் வீட்டிற்கு வெளியே இருந்து மீட்கப்பட்டது.  குளிர்சாதன பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டு கிருஷ்ணன் மீட்கப்பட்டார்.

பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி செய்திகள் காத்திருந்தன. கிருஷ்ணனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலைப் புதைக்க சங்கம் விஹார் பகுதியில் ஒரு வீட்டில் ஆறு அடிக்குக் குழியும் தோண்டியிருந்தமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில், கிஷனைத் தவிர, தீபக் யாதவ், பிரதீப் சர்மா, சர்வேஷ் மற்றும் பிரபுதாயல் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13