(எம்.ஆர்.எம்.வஸீம்)

கோத்தாபய ராஜபக்ஷ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும்போது மேற்கொண்ட நெருக்கடிகளை பொதுமக்கள் மிகவும் வேதனையுடனே பொறுத்திருந்தார்கள். அவ்வாறான நிலையில் அவர் ஜனாதிபதியானால் என்ன நிலை ஏற்படும் என்பதை மக்கள் அறிவார்கள் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அதனால் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ் நாட்டின் ஜனாதிபதியானால் நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு செல்லும். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் என்தை மக்கள் அறிவார்கள். எனவே மக்கள் மீண்டுமொருமுறை தங்கள் கரங்களாலே அழிவைத்தேடிக்கொள்ள முற்படமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.