நியமனம் கிடைக்கவில்லையாயின் நஞ்சருந்தி தற்கொலை செய்வோம் ; சுகாதார தொண்டர்கள்.

Published By: Digital Desk 4

02 Sep, 2019 | 06:35 PM
image

வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையினால் நேர்முகத் தேர்விற்குட்படுத்திய சுகாதார தொண்டர்களில் 65 பெயர்களை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்பெயர் விபரப்பட்டியலில் சுகாதாரத் தொண்டர்களாக சேவை மேற்கொண்டு 100 நாட்கள் போராட்டம் நடத்திய 20பேரின் பெயர் விபரங்கள் வெளிவரவில்லை. 

தொடர்ச்சியாக தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் நியமனத்திற்காக போராட்டம் மேற்கொள்ளப்பட்டும் தமது பெயர் விபரங்கள் வெளிவரவில்லை. இதன் காரணமாக தாங்கள் மிகவும் மன அழுத்ததிற்குட்பட்டுள்ளதாகவும் குடும்ப சுமை காரணமாக தாங்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்த காலத்திலிருந்து தற்காலிகமாக சேவையில் இணைத்து கொள்ளப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 120பேர் தமது பதிவினை மேற்கொண்டு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் தொடர்போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது நிரந்தர நியமனத்தினைக் கோரியிருந்தனர். 

அப்போராட்டம் 100நாட்களை அடைந்ததும் வடமாகாண சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு தொடர்ச்சியாக தமது நியமனத்திற்கான போராட்டங்களை ஆங்காங்கே மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் சேவைக்காலம் கல்வித்தகமை அடிப்படையில் நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டு நேர்முகத் தேர்வு வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து இன்று 65பேரின் பெயர் விபரங்கள் உள்ளடக்கிய பெயர்ப்பட்டடில்  வெளியிடப்பட்டுள்ளது.

இப்பெயர் விபரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 20பேரை புறக்கணித்துள்ளதாகவும் தமக்கு இணைத்துக்கொள்வதற்காக தகமைகள் இருந்தும் உள்வாங்கப்படவில்லை தொடர்ச்சியாக தமக்கான நியமனத்தில் புறக்கணித்து வருவதாகவும் இவ்வாறான சூழ்நிலைகளினால் குடும்ப நிலைமையில் தாங்கள் அனைவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்வதைத்தவிர தமக்கான மாற்று வழிகள் இல்லை என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47