வெள்ளத்தில் இருந்து தன்னுயிர் காக்க சென்னை மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கோயில் பாம்பொன்று கோயிலின் வளாகத்தில் இருந்த பெருமாள் சாமி சிலையின் மேல் ஏறி தன்னுயிரை காத்துக்கொண்ட பட இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் பெய்து வரும் கன மழை  காரணமாக

சென்னை,  மகாபலிபுரம் பகுதியில் பெருமாள் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய பெருமாள் சாமி சிலையின் கழுத்தளவுக்கு நீர் நிறைந்துள்ளது.

இதனால் அந்தக் கோயில் பாம்பு வெள்ளத்தில் இருந்து தன்னுயிரை காக்க சாமி சிலையின் தலைப்பகுதிக்கு ஏறி அமர்ந்திருப்பதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

 அப் பிரதேசத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரால் எடுக்கப்பட்டு குறித்த புகைப்படம் டுவிட்டரில் பதியப்பட்டு, தற்போது இது இணையத்தில் வெகுவாக பரவி வருகின்றது.