(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ். பி திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்க அக்கறை கொள்ளும் சுதந்திர கட்சியினர்.

சுதந்திர கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு  சென்றவர்களுக்கு எதிராக ஏன் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. சுதந்திர கட்சியினர் இன்றும் ஆளும் தரப்பினருக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார்கள் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.