(நா.தனுஜா)

யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்த பின்னர் மக்கள் சுதந்திரமாக நடமாடியதொரு சூழ்நிலையில் தற்போது மக்கள் மீண்டும் அச்சத்துடனும், சந்தேகத்துடனும் வாழும் ஒரு நிலையேற்பட்டுள்ளது.

அனைத்து இன மக்களும் எவ்வித வேறுபாடுகளுமின்றி, அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே தற்போதைய தேவையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் பிவிதுரு ஹெல உறுமயவினால்  நேற்று பத்தரமுல்லை பெலவத்தயில் உள்ள புத்தசாசன விளையாட்டு மைதானத்தில் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.