இந்தியாவின், உத்தர பிரதேசத்தில், தான் இறந்ததாக விடுமுறை கேட்டு கடிதம் எழுதிய மாணவனுக்கு, தலைமை ஆசிரியர் அனுமதி வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்படி சம்பவம், உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் 8ஆம் வகுப்பில் கல்வி பயிலும் ஒரு மாணவன் அரைநாள் விடுமுறை தருமாறு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்பதற்காக மாணவன் விடுமுறைக் கடிதம் எழுதியுள்ளான். அதில்,  தன் பாட்டி இறந்து விட்டதாக எழுதுவதற்கு பதில்,‘நான் இன்று காலை 10 மணியளவில் இறந்துவிட்டதால் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என எழுதியுள்ளார். இதனை கவனிக்காத தலைமை ஆசிரியரும் கையொப்பமிட்டு அனுமதி வழங்கியுள்ளார்.

தலைமை ஆசிரியரே இவ்வாறான பிழை விடுவதா? என்ற கோணத்தில் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.