'போரா' சமூக ஆசூரா தின மாநாடு: கொழும்பில் முதன்முறையாக ஒன்றுகூடிய 40 ஆயிரம் போரா முஸ்லிம்கள்

Published By: Digital Desk 8

02 Sep, 2019 | 01:13 PM
image

போரா சமூகத்தினர் நடத்தும் 'போரா' சமூக ஆசூரா தின சர்வதேச மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை போரா சமூகத்தின் தலைவர் கலாநிதி ஸெய்யிதினா முபாதல் (முப்படேல்) ஸைபுத்தீன் தலைமையில் ஆரம்பமானது.
இம்மாநாடு இம்மாதம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை, கொழும்பு - கொள்ளுப்பிட்டியிலுள்ள போரா சமூக பள்ளிவாசலை மையப்படுத்தி நடைபெறவிப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 



கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலாத்துறை அதிகார சபை என இதனுடன் தொடர்புபட்ட நிறுவங்களின் ஊடாக இம்மாநாட்டிற்காக கொழும்பிலுள்ள முறையான மற்றும் முறைசாரா துறையில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா தெரிவித்தார்.
அத்துடன், இவர்களுக்காக கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் காலி ஆகிய நகரங்களிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான அறைகளையும் சுற்றுலாத்துறை அமைச்சு ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், இலங்கையில் மிகப் பெரிய சுற்றுலாத்துறைக்கு போரா இன முஸ்லிம்கள் 40 ஆயிரம் பேர் கொழும்பில் கூடியுள்ளமை இதுவே முதற்தடவையென்பதுவும் முக்கிய அம்சமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-06-13 08:54:11
news-image

கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழப்பு

2026-06-13 08:44:44
news-image

கொழும்பு, கொச்சிக்கடை சுற்றுவட்டாரத்தில் இன்று சிறப்பு...

2026-06-13 06:31:19
news-image

ரத்மலானாயில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள...

2026-06-13 06:07:42
news-image

இன்றைய வானிலை

2026-06-13 06:00:25
news-image

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு;...

2026-06-13 05:59:16
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறிய...

2026-06-13 05:52:02
news-image

பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு DNA பரிசோதனைக்கு...

2026-06-13 05:42:27
news-image

எரிபொருள் கொள்வனவு தகவல்களை மறைக்கும் அரசு...

2026-06-13 05:30:03
news-image

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷனின் விடுதலைக்காக சுமந்திரன்...

2026-06-13 05:25:39
news-image

கனிய மணல் அகழ்வாராய்ச்சியினால் ஏற்படக்கூடிய சேதத்தை...

2026-06-13 05:22:12
news-image

செம்மணி விவகாரத்தில் நீதி உறுதி செய்யப்படும்:...

2026-06-13 05:10:43