உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் சூப்பர் வெல்டர்வெயிட் போட்டியில் கியூபாவின் எரிஸ்லேன்டி லாரா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

முன்னாள் உலக சாம்பியன் லாராவுக்கும், ராமோன் அல்வரேஸுக்கும் இடையே மின்னியாபொலிஸ் நகரில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லாரா, 2 ஆவது சுற்றில் விட்ட சரமாரி குத்துகளால் நிலைகுலைந்த அல்வரேஸ் கீழே விழுந்தார். 

கடந்த 2018 இல் இழந்த உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெற்றார் லாரா.