கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படமான 'சபாஷ் நாயுடு' படத்தில் அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மகளாக நடிக்கவுள்ளார். இளைய மகள் அக்ஷராஹாசன் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக ஹொலிவூட் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளராம். மனு நாராஜன் என்ற நடிகரையே ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடிக்க கமல் தேர்வு செய்துள்ளார். இவர் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் மட்டுமின்றி 'Good Night Good Morning', 'Wall Street' உள்பட ஒருசில ஹொலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை 16ஆம் திகதி முதல் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ராஜீவ்குமார் இயக்கவுள்ளார்