புத்தளம் - மணல்குண்டுவ பிரதேசத்தில் ஹெரோயின் வர்த்தகர் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கஐ முத்துக்கள் புத்தளம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) புத்தளம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.

புத்தளம் மணல்குண்டுவ பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஹெரோயின் வர்த்தகர் ஒருவரே இரண்டு கஜ முத்துக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கஜ முத்துக்களை வனாதவில்லுவ, எலுவன்குளம் பிரதேசத்தில் கொள்வனவு செய்ததாக சந்தேகநபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவற்றின் விலை மற்றும் விற்பனையாளர் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த 620 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கஜ முத்துக்களையும், ஆய்வுக்காக மாணிக்ககல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.