மேற்கு, மத்திய, சபராகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, உவா மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வட-மத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம் , திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலயிலா மாவட்டங்களில் சில வேளைகளில் காற்றின் வேகம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்கும்.
இடி மின்னல் வேளைகளில் பாதிப்புக்களை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM