வவுனியா மாவட்டத்தில் செயற்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா  இன்று (02.09) கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், தமது கட்சியினால் முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள், எதிர்வரும் தேர்தலில் செயற்படுவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் கட்சி உறுப்பிர்களுக்கிடையிலான கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன், கட்சியின் பிரமுகர்கள், ஈ.பி.டி.பி யின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிரந்தனர்.