பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர். 

டாக்காவில் நேற்று இரவு சயின்ஸ் லேப் சந்தியருக அமைச்சர் ஒருவரின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது நடைபாதையில் இருந்து குண்டு வீசப்பட்டது. அமைச்சரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அமைச்சர் காயமின்றி உயிர் தப்பினார்.

எனினும் இதன்போது பாதுகாப்பு பணியிலிருந்த இரு பொலிஸார் காயமடைந்துள்னர்.

காயம் ஏற்பட்ட பொலிஸார் டாக்கா வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி.காட்சிகளை மையப்படுத்தி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை குண்டுவெடிப்பு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க எஸ்.ஐ.டி.இ. புலனாய்வுக் குழு, தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதக்குழு பொறுப்பேற்றுள்ளது என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.