அதிரடியால் மிரட்டினார் குசல் ; வலுவான நிலையில் இலங்கை

Published By: Vishnu

01 Sep, 2019 | 08:44 PM
image

குசல் மெண்டீஸின் அதிரடியான ஆட்டத்துடன் நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு -20 போட்டியில் இலங்கை அணி 174 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிய இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்றிரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.

பேட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணி சார்பில் குசல் மெண்டீஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

முதல் மூன்று ஓவர்களுக்கு நிதானமான ஆட்டத்தை இவர்கள் வெளிப்படுத்தினாலும் நான்காவது ஓவரை எதிர்கொண்டு குசல் மெண்டீஸ் முதலிரு பந்துகளிலும் அடுத்தடுத்து இரு நான்கு ஓட்டங்களையும், மூன்றாவது பந்தில் ஆறு ஓட்டத்தையும் விளாசித் தள்ளினார். 

அது மாத்திரமன்றி அந்த ஓவரின் இறுதிப் பந்திலும் குசல் பெரேரா ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளினார். மொத்தமாக அந்த ஓவரில் 19 ஓட்டங்கள் பெற, இலங்கை அணி நான்கு ஓவர் முடிவில் எதுவித விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களை பெற்றது.

இந் நிலையில் 4.3 ஆவது ஓவரில் குசல் பெரேரா மொத்தமாக 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, டிம் சவுதியின் பந்து வீச்சில் கிரேண்ட்ஹோமிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக அவிஷ்க பெர்னாண்டோ களமிறங்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணியின் வேகம் குறைய ஆரம்பித்தது அதன்படி 5 ஓவர் நிறைவில் 44 ஓட்டத்தையும் 6 ஓவர் நிறைவில் 50 ஓட்டங்களையும் ஒரு விக்கெட் இழப்பிற்கு பெற்றது.

இதன்பின்னர் 9.1 ஆவது ஓவரில் அவிஷ்க பெர்னாண்டோ 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற நிரோஷன் திக்வெல்ல ஆடுகளம் புகுந்தார்.

திக்வெல்லவுடன் கைகோர்த்து மீண்டும் அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்த குசல் மெண்டீஸ் 11.3 ஆவது ஓவரில் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக அரைசதம் கடந்தார்.

13 ஆவது ஓவர‍ை எதிர்கொண்ட குசல் மெண்டீஸ் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளியதுடன் இரண்டாவது பந்தில் ஒரு ஓட்டத்தையும் பெற்றார். இதனால் இலங்கை அணி 13.2 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 100 ஓட்டங்களை பெற்றது.

இதன் பின்னர் இலங்கை அணி 15 ஆவது ஓவரில் 114 ஓட்டங்கள‍ை பெற்றது. குசல் மெண்டீஸ் 66 ஓட்டத்துடனும், திக்வெல்ல 19 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

16 ஆவது ஓவரை எதிர்கொண்ட குசல் மெண்டீஸ் முதல் பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தையும், இரண்டாவது பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தையும் விளாசித் தள்ளினார். அது மாத்திரமன்றி அந்த ஓவரின் இறுதிப் பந்தை எதிர்கொண்ட திக்வெல்ல நான்கு ஓட்டத்தை விளாசினர். இதனால் அந்த ஓவரில் 17 ஓட்டங்கள் பெற, இலங்கை அணி 16 ஆவது ஓவரின் இறுதியில் 131 ஓட்டங்களை பெற்றது.

இந் நிலையில் 16.1 ஆவது ஓவரில் குசல் மெண்டீஸ் டிம் சவுதியுடைய பந்து வீச்சில் மொத்தமாக 53 பந்துகள‍ை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 79 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நான்காவது விக்கெட்டுக்காக தசூன் சானக்க களமிறங்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி 17 ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 136 ஓட்டத்தையும் 18 ஓவரில் 144 ஓட்டத்தையும் 19 ஓவரில் 151 ஓட்டத்தையும் பெற்றது.

19.3 ஆவது ஓவரில் டிக்வெல்ல 33 ஓட்டத்துடன் ரன்வுட் முறையில் ஆட்டமிழக்க ஆடுகளம் நுழைந்த இசுறு உதான முதலிரு பந்துகளிலும் அடுத்தடுத்து இரு ஆறு ஓட்டங்களை விளாசியதுடன், இறுதிப் பந்திலும் மூன்று ஓட்டங்களை பெற்றார்.

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் இசுறு உதான 15 ஓட்டத்துடனும், தசூன் சானக்க 17 ஓட்டத்துடனும் ஆட்டமிக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சவுதி 2 விக்கெட்டுக்களையும், மிட்செல் சாண்டனர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22