(செ.தேன்மொழி)

இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்தில் வாகன விபத்துகளின் மூலம் சிறுவரொருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திரப்பனை , பொரலஸ்கமுவ ,ஹாலியெல ,வந்துரப, பாணந்துறை தெற்கு ,களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளிலே விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.