நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இப் போட்டியானது இன்றிரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லசித் மலிங்க தலைமையிலான 11 பேர் கொண்ட இலங்கை அணிக் குழாமில் தனுஷ்க குணதிலக்க, குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டீஸ், நிரோஷன் திக்வெல்ல, தசூன் சானக்க, இசுறு உதான, கசூன் ராஜித, அகில தனஞ்சய மற்றும் வசிந்து ஹசரங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணிக் குழாமில் மார்டின் குப்டீல், கொலின் முன்ரோ, டாம் புரூஸ், ரோஸ் டெய்லர், டிம் சீஃபர்ட், கிரேண்ட்ஹோம், மிட்செல் சாண்டனர், ஸ்காட் குகலீஜ்ன், இஷ் சோதி மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.