இந்தியா - தமி­ழ­கத்தைச் சேர்ந்த வயோ­திபப் பெண் ஒருவர்  சுமார் 40 ஆண்­டு­க­ளாக மண்ணை உட்­கொண்டு உயிர் வாழ்ந்து வரும் சம்­பவம் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

தூத்­துக்­குடி மாவட்டம் முத்­தை­யா­புரம் அருகே சூசை­நகர் பகு­தியில் வசித்து  வரும் 80 வயது வயோ­திபப் பெண் மரி­ய­செல்வம். இவர் பல ஆண்­டு­க­ளாக மண்ணை  உட்­கொண்டு வாழ்ந்து வரு­கிறார். 

இது குறித்து அவர் கூறும்­போது, சிறு வயது முதலே மண் என்றால் அலாதி பிரியம். அதனை அப்­ப­டியே எடுத்து வாயில் போட்டு உண்பேன். நாள­டைவில் அத­னையே உண­வாக உட்­கொள்ள ஆரம்­பித்தேன். மண்ணை கொண்டு வந்து அதை சலித்து பின் அதை நொறுக்­குத்­தீனி போல மென்று உண்பேன்.ஆரம்­பத்தில் உண்­ணும்­போது வயிறு வலி ஏற்­பட்­டது. நாள­டைவில் அது­போன்ற பிரச்­சினை ஏது­மில்லை. இது­வரை எனக்கு எந்­த­வொரு உடல் உபா­தையும் ஏற்­பட்­டது கிடை­யாது. வைத்தியரையும் சென்று பார்த்­தது கிடை­யாது. நல்ல ஆரோக்­கி­யத்­து­ட­னேயே உள்ளேன். 

எனது வீட்டில் உள்­ள­வர்கள்  கண்டித்த போதும்  நான் மண்ணை  உண்ணும் பழக்­கத்தை விட­வில்லை. கடந்த 40 ஆண்­டு­க­ளாக மண் உண்டு உடல் ஆரோக்­கி­யத்­துடன் இருந்து வரும் 80 வயதான மரிய செல்வத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.