மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போடடியில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பும்ரா ஹேட்ரிக் சாதனை புரிந்துள்ளார். 

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் ஒருநாள், இருபதுக்கு - 20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளைாயடி வருகிறது.

இதில் ஏற்கனவே இருபதுக்கு - 20 மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதேவேளை கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம் திகதி நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி 318 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றிருந்தது.

இந் நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று  ஜமேக்காவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் ஹோல்டர் களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 416 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ஹனுமா விஹாரி 16 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 111 ஓட்டத்தையும், விராட் கோலி 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 76 ஓட்டங்களையும், மயங்க் அகர்வால் 55 ஓட்டங்களையும், இஷாந்த் சர்மா 57 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஜோசன் ஹோல்டர் 5 விக்கெட்டுக்களையும், ரஹ்கீம் கோர்ன்வால் 3 விக்கெட்டுக்களையும், பிரித்வெய்ட் மற்றும் கேமர் ரோச் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 87 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் அசத்திய பும்ரா ஹட்ரிக் உடன் 6 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்தில் டரன் பிராவோவை 4 ஓட்டத்துடனும், மூன்றாவது பந்தில் ஷமர் ப்ரூக்ஸை டக்கவுட்டுடனும், நான்காவது பந்தில் ரோஸ்டன் சேஸையும் டக்கவுட்டுடனும் ஆட்டமிழக்க செய்து இந்த ஹெட்ரிக் சாதனையை புரிந்தார்

இது தவிற மொஹமட் ஷமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இந்த ஹெட்ரிக் சாதனை மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஹெட்ரிக் சாதனை படைத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hat tricks for India in Test cricket

Harbhajan Singh vs Aus Kolkata 2001

Irfan Pathan vs Pak Karachi 2006

Jasprit Bumrah vs WI Kingston 2019