இலங்கையில், தனிப்பெருந்தன்மை தனை தன்வசம் கொண்ட ஒரே ஒரு தனியார் பாடசாலையாம் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் கல்விக்கண்காட்சி  2013 ஆம் ஆண்டிற்கு பின்  2019 ஆம் ஆண்டு இம்முறையும் இடம்பெறவுள்ளது.

மாணவத் தலைவியர் ஒன்றியம் பெருமையுடன் வழங்கும்  AURORA-2019 கல்விக்கண்காட்சி புரட்டாதி மாதம் 5 ஆம், 6 ஆம்,7 ஆம் திகதிகளில் காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

இதற்கு முன்னர் பலரது பாராட்டையும் பெற்ற வித்தியாலயத்தின் நிகழ்வுகளின் வரிசையில் இந்நிகழ்வும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வழமைபோல் எமது மாணவர்கள்  தமது  தனித்திறமைகள், ஆற்றல்களை வெளிக்காட்டும் முகமாக பல்வகைப்பட்ட தலைப்புக்களின் கீழ் தமது ஆக்கங்களை உருவாக்கி விளக்கங்களை வழங்கவும் உள்ளனர். 

இக்கண்காட்சியை  5 ஆம் திகதி சைவ மங்கையர் வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்களும் 6 ஆம் திகதி வெளிப்பாடசாலை மாணவர்களும் 7 ஆம் திகதி பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அனைவரும் கண்காட்சியை பார்வையிடலாம்.

அதேவேளை மேற்குறிப்பிட்ட 3 நாட்களும் மதியம் 2 மணிக்கு பின்னர் பொதுமக்கள் அனைவரும் பார்வையிட முடியும் எனவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்நிகழ்வு வெற்றிபெற அனைவரையும்  இக்கண்காட்சியை கண்டுகளிக்க வருமாறு உள்ளன்போடு கண்காட்சி ஒழுங்கமைப்புக்குழு வரவேற்கின்றது.