மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச சபை பிரிவில் சட்டவிரோதமான முறையில் வீதிகளில் அலைந்து திரிந்து பாதசாரிகளுக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையூறு விளைவித்த 40 மாடுகள் இன்று பிரதேசசபை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக பிரதேச சபை வருமான பரிசோதகர் எம்.வசந்தகுமார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து தலா 5000 ரூபாய் வீதம்  2 இலட்சம் ரூபாய் தண்டமாக அறவிடப்பட்டுள்ளதுடன் நிபந்தனையின் கீழ் மாடுகள் விடுவிக்கப்பட்டதாக பிரதேச சபை செயலாளர் ஜே.அருள்பிரகாசம் தெரிவித்தார்.

குறித்த பிரதேச சபை எல்லைக்குள் இவர்வாறு திரியும் மாடுகளால் மக்கள் பெருமளவு கஷ்டங்களை எதிர்கொண்டுவருகின்றனர். இதனையடுத்து மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின்கீழ் பிரதேச சபை செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் இம்மாடுகள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(ஜவ்பர்கான்)