இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா 

By Vishnu

01 Sep, 2019 | 09:47 AM
image

இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால தேசிய பூங்கா மூடப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யால தேசிய பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ள வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்கள் இன்று மூடப்படும் தேசிய பூங்கா எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதேவேளை நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளை கணக்கெடுப்பை கருத்திற் கொண்டு நாட்டின் அனைத்து தேசிய பூங்காக்களும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right