தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கு முன்னால் பிரதான வீதியில் இன்று  (31) மாலை  ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image may contain: 3 people, people standing and outdoor

கந்தபொல பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும்,  தலவாக்கலையிலிருந்து நகரசபை குறுக்கு வீதிக்கு திருப்ப முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகின.

Image may contain: 1 person, car and outdoor

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Image may contain: 3 people, car and outdoor

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில்  லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.