பர்கின்சன் நோயை குணப்படுத்த உதவும் APO PEN மற்றும் APO PUMP என்னும் புதிய சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

தற்போது தெற்காசியாவில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய ஆய்வின் மூலம் ஒரு இலட்சம் பேரில் 150 பேர் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களது உடலியக்கம் நாளடைவில் குறைந்து விடும். 

அவர்களுடைய செயற்பாடுகளில் வேகம் குறைந்து விடும். மிக மெதுவாக நடப்பார்கள். சில தருணங்களில் ஒரேயிடத்தில் நீண்ட நேரம் நின்றுவிடுவார்கள்.  இது போன்ற நிலைகளில் இருப்பவர்களுக்கு இதுவரை மருந்து மற்றும் சத்திரசிகிச்சை மட்டுமே சிறந்த நிவாரணமாக இருந்தது. 

மருந்து மற்றும் சத்திர சிகிச்சையால்  முழுமையான நிவாரணம் பெறமுடியாதவர்களுக்கு தற்போது அறிமுகமாகியிருக்கும் APO PEN மற்றும் APO PUMP  என்ற தெரபி சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது. இதனால் இத்தகைய சிகிச்சைக்கு நோயாளிகளிடத்தில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது.

நாம் உறங்கும் போது எம்முடைய மூளைப் பகுதியில் செரட்டோனின் மற்றும் டோபமைன் போன்ற சுரப்பிகள் தங்களுடைய பணியை மேற்கொள்ளும். இதன்போது இவ்விரண்டு சுரப்பிகளின் பணியில் இயல்பான அளவைவிட அதிகமான சுரத்தல் அல்லது குறைவான சுரத்தல் நிகழுமாயின் அவர்களுக்கு பார்க்கின்சன் நோயின் பாதிப்பு ஏற்படும். 

இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து, தற்போது அறிமுகமாகியிருக்கும்  APO PEN மற்றும் APO PUMP சிகிச்சை அளித்தால் குணப்படுத்தலாம். அத்துடன் இந்த தெரபி, சத்திரசிகிச்சையற்ற தெரபி என்பதும் குறிப்பிடதக்கது.

டொக்டர் வினோத்.

தொகுப்பு அனுஷா.