மலேசியாவுக்கு இந்தோனேசிய தொழிலாளர்களை கடத்தும்முயற்சியினை இந்தோனேசிய காவல்துறை முறியடித்துள்ளது.
29 குடியேறிகளை மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில் அவர்களை பிண்டன் (Bintan)தீவிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவர்களை கடத்த முயன்றதாக வோலோ(39) மற்றும் பனுஸ் (35) என்ற இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு பிண்டனிலிருந்து மலேசியாவுக்கு இடம்பெயரும் தொழிலாளர்களை சட்டவிரோதமாக கடத்தும் வேலைகள் நடப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரியாயு(Riau) தீவு காவல் ஆணையரின் மக்கள் தொடர்பு அலுவலர் எர்லங்க்கா தெரிவித்துள்ளார்.
“மீட்கப்பட்ட 29 தொழிலாளர்களில் 8 பேர் பெண்கள், 21 பேர் ஆண்கள். அனைவருமே கிழக்கு நுசா டெங்கரா (East Nusa Tenggara) மாகாணத்தை சேர்ந்தவர்கள்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயரும் இந்தோனேசிய தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இரு சந்தேக நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடத்தல் குற்றம் நிருப்பிக்கப்பட்டால் பத்தாண்டுகள் சிறைத்தண்டனையும் பல இலட்சக்கணக்கான ரூபாய் அபராதமும் அந்த இரு சந்தேக நபர்கள் செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM