தரை தட்டி நின்ற கடலோர காவல் படை கப்பல் மீட்பு..!

Published By: Digital Desk 3

31 Aug, 2019 | 04:04 PM
image

மண்டபம் கடலில் தரை தட்டி நின்ற இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், மீனவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், இந்திய கடலோர காவல் படை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடல் ரோந்து பணிக்காக 5 ஹோவர் கிராஃப்ட் கப்பல்களும், 2 அதிவேக கப்பல்களும் உள்ளன. இதை தவிர 2 சிறிய ரக ரோந்து படகுகளும் உள்ளன. இந்த கப்பல்கள் மற்றும் படகுகள், பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சி-432 என்ற அதிவேக கப்பல் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்து பணிக்கு சென்று விட்டு மண்டபம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, கப்பல் வரும் பாதையில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆழம் குறைந்த அந்தப் பகுதியில் கப்பல் வந்தபோது, திடீரென தரை தட்டி நின்றது. கப்பலை அங்கிருந்து உடனடியாக நகர்த்துவதற்கு கடலோர காவல் படையினர் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து, மண்டபத்தில் உள்ள மீனவர்களின் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு,  கடலோர காவல் படைக்குச் சொந்தமான சிறிய ரக ரோந்து படகு போன்றவைகள் அங்கு கொண்டுசெல்லப்பட்டு, அவற்றின் உதவியுடன் சிக்கிய கப்பலில் கயிறு கட்டி இழுத்து பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தொடர்ந்து அந்தக் கப்பல், கடலோர காவல்படை நிலையத்தில் உள்ள கப்பல் நிறுத்தும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

தரை தட்டியதில் கப்பலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால், கடலோர காவல்படையினர் நிம்மதி அடைந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34