இந்தயாவில் தொழிற்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தயாவில்  மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரசாயன தொழிற்சாலையில் 200 லிட்டர் இரசாயன பீப்பாய் வெடித்ததை தொடர்ந்து தீ தொழிற்சாலையின் பிற பகுதிகளுக்கும் பரவியதையடுத்து தொடர்ச்சியாக வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 12 பேர் உயிரழந்துள்ளதோடு 50 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலை மோசமாக இருப்பதால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.