வத்தளை இந்து மன்றத்தினால் விநாயகர் சதுர்த்தி விழா நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு விநாயகர் சிலை பிரதிஷ்டையுடன் ஆரம்பமாகவுள்ளது. 

நாளையிலிருந்து எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 6.30 மணிமுதல் சிறப்பு கணபதி ஹோமத்துடன் பஜனை, தேவாரங்கள், பக்தி பாடல்கள் இடம்பெறும். 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வத்தளை இந்து மன்ற வளாகம் , இலக்கம் 96 , ஹேக்கித்தை வீதி, வத்தளையில் விநாயகர் ஊர்வலம் ஆரம்பமாகும். 

இதற்காக பக்தர்கள், பஜனை குழுக்கள், உபயக்காரர்கள் அனைவரையும் அழைப்பதாக வத்தளை இந்து மன்றம் தெரிவித்துள்ளது. 

077-3828152, 077-8400119, 077-7416842 மற்றும் 071-4888757 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.