குருணாகல் - மில்லவ பிரதான வீதியின் பள்ளியவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குருணாகல் - மில்லவ பிரதான வீதியின் பள்ளியவத்த பிரதேசத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 இதில், இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதன்போது சிகிச்சை பலனிற்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்தில் மாஸ்பொத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். குருணாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.