வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் சோதனையும் , அணிவகுப்பும்

Published By: R. Kalaichelvan

31 Aug, 2019 | 11:15 AM
image

பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோதனைகள் இன்று காலை ஆரம்பமாகின.

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாதசில்வா தலைமையில் இச்சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.

பொலிஸ் நிலையங்களை பரிசோதித்தல், பொலிஸாரின் உடைகளை பரிசோதித்தல், மோப்ப நாயினை பரிசோதித்தல், பொலிஸாரின் பாவனையிலுள்ள ஜீப் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களும் சோதிக்கப்பட்டன.

மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் இத்தகைய அரையாண்டு சோதனைகள் பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்திலுள்ள மைதானத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.திஸ்ஸாலாதசில்வா, உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.பிரசன்ன வெலிகல, வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட வவுனியா பிராந்தியத்தில் இருக்கின்ற பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் என  பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை...

2024-02-24 08:52:35
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21