(எஸ்.கணேசன்) 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறும். 

வடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. 

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.