(நா.தினுஷா) 

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது. வேறுபட்ட நிலைபாடுகளே இருக்கின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரில் யாரை வேட்பாளராகத் தெரிவு செய்தாலும் அவரை வெற்றிபெறச் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.