(எம்.நியூட்டன்)

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 2000 - 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் , மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.