(நா.தனுஜா)

தன்னிச்சையானதும், சட்டத்திற்கு முரணானதுமான கைது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சாந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையானதும், சட்டத்திற்கு முரணானதுமான கைது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்வைத்துள்ள பரிந்ரைகளை அடிப்படையாக கொண்டே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.