டெஸ்ட் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா? 

Published By: Vishnu

30 Aug, 2019 | 12:15 PM
image

இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமேக்காவில் பிற்பகல் 2:30 க்கு ஆரம்பமாகவுள்ளது. 

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் ஒருநாள், இருபதுக்கு - 20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளைாயடி வருகிறது.

இதில் ஏற்கனவே இருபதுக்கு - 20 மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதேவேளை கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம் திகதி நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி 318 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றிருந்தது.

இந் நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று  ஜமேக்காவில் இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

முதலாவது டெஸ்ட் போட்டி போன்றே இந்த போட்டியிலும் இந்திய அணியினர் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் உள்ளனர். 

மறுபக்கம் செந்த மண்ணில் தொடர்ந்து தடுமாறி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணியினர்  ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே அந்த அணியால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இல்லாவிட்டால் பலவீனமே வெளிப்படும். 

மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் கடந்த 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியை டெஸ்ட் அரங்கில இதுவரை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09