அஜித் தனது மகளுக்காக புதுப்படங்களில் நடிக்கும் போது நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். 

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் அப்பாவிற்கும் மகளிற்கும் இடையேயான பாச போராட்டம் அழகாக காண்பிக்கப்பட்டிருந்தது. இதனை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் இரசிகர்கள் திரண்டிருந்தனர்.

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தில் வரும் அஜித்தின் கதாபாத்திரம் தனது மகளான அனோஷ்காவிற்கு பிடித்திருப்பதாகவும் அதன் காரணமாக இனி தான் நடிக்கும் திரைப்படங்களில் பெண்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இருக்க கூடாது எனவும் அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான நேர்கொண்ட பார்வை படமும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தை பார்த்த அனைவரும் அஜித் கதாபாத்திரத்தை பாராட்டினார்கள்.

 நேர்கொண்ட பார்வை படத்தால் பெண்கள் மத்தியில் தனக்கு நல்ல பெயர் ஏற்பட்டிருப்பதை அஜித் உணர்ந்துள்ளார். அதனால் பெண்களை கேலி செய்யும் காட்சிகள் தன் படத்தில் இருக்கவே கூடாது என்று இயக்குநர்களிடம் கூறுகிறாராம் அஜித். 

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் வினோத் இயக்கத்தில் தல 60 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அஜித் பொலிஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. வினோத் படத்திற்காக அஜித் ஷேவ் செய்து, தலைக்கு டை அடித்து பழைய தல போன்று இருப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது