நமது கிரிக்கெட் வீரர்கள் மன ரீதி­யா­க வீழும் போது அவர்­களின் மன வலி­மையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு பகி­ரங்க விவா­த­மொன்றை நடத்­த­வேண்டும் என்று இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும் கிரிக்கெட் ஜாம்­ப­வா­னு­மா­கிய குமார் சங்­கக்­கார தெரி­வித்­துள்ளார்.

மன அழுத்­தத்­தினால் செய்­து­ கொள்­ளப்­படும் தற்­கொ­லை­க­ளைத் தடுக்க உதவும் 1333 இல­வச சேவையை பிர­ப­லப்­ப­டுத்தும் முக­மாக நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்­து­ கொண்­டி­ருந்த போது குமார் சங்­கக்­கார மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

நமது வீரர்கள் மன ரீதி­யாக வீழும் போது அவர்­களைக் கட்­டி­யெப்ப பகி­ரங்க விவாதம் ஒன்று நடை­பெ­றாததால்தான் பல வீரர்­களின்  விளையாட்டுப் பயணம் இடைநடுவே தடைப் படுகின்றது என்றும் குமார் சங்கக்கார சுட்டிக் காட்டியுள் ளார்.