பளை சட்ட வைத்­திய அதி­கா­ரியின் வாக்­கு ­மூ­லத்தின் அடிப்படையில் இதுவரை அறுவர் கைது

Published By: Daya

30 Aug, 2019 | 11:00 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­ய­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டில் இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு, தற்­போது பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரின் தடுப்பில், யாழ். பொலிஸ் நிலை­யத்தில் வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டு­வரும் பளை சட்ட வைத்­திய அதி­காரி சின்­னையா சிவ­ரூ­பனின் வாக்கு மூலம் மற்றும் வேறு சான்­று­க­ளுக்கு அமைய மேலும் 6 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.  

இந் நிலையில் இது­வரை இந்த விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள சட்­ட­வைத்­திய அதி­காரி உள்­ளிட்ட 7 பேர் தொடர்­பிலும் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க கொழும்­பி­லி­ருந்து  பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் தலைமை அலு­வ­ல­கத்தில் இருந்து உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழ் சிறப்புக் குழு­வொன்று யாழ்ப்­பா­ணத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக  பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார்.

 கடந்த 18 ஆம் திகதி இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு, பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பளை சட்ட வைத்­திய அதி­கா­ரி­யிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களை அடுத்து  முதலில் நான்கு பேரை சி.ரி.ஐ.டி.யினர் கைது செய்­தனர். 

 சின்­ன­மணி நனேஷ்­வரன்,  இரத்­தினம் கிருஷ்­ண­ராஜா,  மோக­ன­சுந்­தரம் சின்­ன­துறை,  விநா­ய­க­மூர்த்தி நெகிலன் ஆகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்பட்­ட­வர்­க­ளாவர். 

கொழும்பில் இருந்து சென்ற உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் தலை­மை­யி­லான குழு  சட்ட வைத்­திய அதி­காரி சின்­னையா சிவ­ரூ­ப­னிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், பளை பகு­தியில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ஆயு­தங்கள் உட்­பட பல ஆயு­தங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. 

அவற்றில் ஏ.கே.47 துப்­பாக்கி ஒன்று,  அந்த துப்­பாக்­கிக்கு பயன்­ப­டுத்­த­ப்படும் இரு மெக­சின்கள்,  அத்­துப்­பாக்­கிக்கு பயன்­ப­டுத்­தப்­படும் 120 தோட்­டாக்கள், 11 கைக்­குண்­டுகள்,  பீ.ஈ.10 ரக வெடி­பொருள் என சந்­தே­கிக்­கப்­படும் வெடி­பொருள் 10 கிலோ,  தூரக் காட்டி, புலிகள் மற்றும் இரா­ணு­வத்­தினர் பயன்­ப­டுத்தும் இரு தொப்­பிகள் உள்­ளிட்ட பல ஆயு­தங்கள் மற்றும் உப­க­ர­ணங்கள் இவ்­வாறு கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன.

அதனை மையப்­ப­டுத்தி முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­களில் மேலும் இரு­வரை நேற்று முன்தினம் இரவு சி.ரி.ஐ.டி.யினர் கைது செய்தனர்.  ரி. நிமலராஜ்,  ரூபன் ஜதுஷன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களாவர்.

மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு முன்னெடுத் துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48
news-image

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி 

2026-02-18 13:06:24