தங்கொட்டுவையில் விபத்து ; இருவர் பலி

Published By: R. Kalaichelvan

30 Aug, 2019 | 02:24 PM
image

(செ.தேன்மொழி)

தங்கொட்டுவ பகுதியில் தனியார் பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு, இரு பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கொட்டுவ - பன்னல பிரதான வீதியில் வைத்தியசாலைக்கு அருகில் இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நீர்கொழும்பிலிருந்து கிரிவுள்ள பகுதிக்குச் சென்ற தனியார் பஸ், எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பெண்ணொருவரும் தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஹந்துன்குட்டி ஆராச்சிகே ரஞ்சித் எனப்படும் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் வெல்பல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய தோன குமுதுனி தம்மிக்கா ஜயகொடி என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தின் போது தனியார் பஸ்சில் சென்ற இரு பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதியை கைது செய்யதுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் தாக்குதல்...

2024-03-04 00:02:28
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13