(ரொபட் அன்­டனி)

சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் நேற்று முக்­கிய பேச்­சு­வார்த்தை ஒன்று நடை­பெற்­றி­ருக்­கின்­றது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில் அதன் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர, பொரு­ளாளர்  லசந்த அழ­கி­ய­வண்ண மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீர ஆகியோர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வு­ட­னான சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். 

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  சுதந்­தி­ரக்­கட்­சிக்கும்  பொது­ஜன பெர­மு­ன­விற்­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை மற்றும் ஜனா­தி­ப­திக்கும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­க­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை என்­ப­வற்றின் தொடர்ச்­சி­யா­கவே கோத்­தா­ப­ய­வுக்கும்  சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கும் இடை­யி­லான  இந்த பேச்­சு­வார்த்தை  இடம்­பெற்­றுள்­ளது. 

இதன்­போது எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல்,  கொள்­கைகள் தொடர்பில்  நீண்­ட­நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­ட­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  குறிப்­பாக அடுத்து அமைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற அர­சாங்­கத்தில்  அமைச்­சர்­களின்  எண்­ணிக்கை மற்றும் தேர்தல் முறைமை அபி­வி­ருத்தி கொள்கை போன்ற முக்­கி­ய­வி­ட­யங்கள் குறித்து இதன்­போது பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அனு­ம­தி­யு­ட­னேயே இந்த சந்­திப்பு சுதந்திரக்கட்சியின் பிரதிகள் கலந்து கொண்டிருந்தனர். கோத்தாபய ராஜபக்ஷவுக்கும்  சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையில் மேலும் சில பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.