இலங்கையர்களான நாம் மிகபழைமை வாய்ந்த தத்துவ கோட்பாடுகளுக்கு உரிமை கோரும் அதேவேளை, அவற்றினூடாக போஷிக்கப்பட்ட சிறந்த கலாச்சாரத்தைக் கொண்ட அபிமானமிக்க மக்களாவோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அக்கலாச்சாரத்தினால் உருவாக்கப்பட்ட மொழி, இலக்கணம், இலக்கியங்கள், வாஸ் த்து சாஸ்திரம் மற்றும் கலைப் படைப்புக்கள் ஆகியன உலக நாகரீகத்துடன் சேர்க்கப் பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அம்மொழிகளை பாதுகாப்பது இலங்கையர்களான எமது பொறுப்பாகுமென குறிப்பிட்டார்.

நேற்று பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற இலங்கை பிரிவெனா கல்வி நிறுவனத்தின் பிரிவெனா பண்டிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

இலங்கை தேசத்திற்கு கற்றறிந்த பண்புடைய தலைமுறையொன்றை பெற்றுக் கொடுக் கும் முன்னோடி நிறுவனமான இலங்கை பிரிவெனா கல்வி நிறுவனத்தினால் ஆற்றப் படும் சேவைகளை பாராட்டிய ஜனாதிபதி அதனை போதுமான இடவசதியுடைய இட மொன்றில் நிறுவுவதற்கு தேவையான பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட பிரிவெனா பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 300 பேருக்கு இதன்போது பிரிவெனா பண்டிதர் பட்டம் வழங்கப்பட்டது.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்றி தர்ம மகாசங்க சபையின் அநுநாயக்கர் களனி பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கல்வி பட்டப்பின் படிப்பு கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கொடபிடியே ராகுல தேரருக்கு “சிறப்பு பண்டிதர்” பட்டம் இதன்போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இதன்போது விசேட கௌரவ பட்டம் வழங்கப்பட்டதுடன், “விபுத ஜன பிரசாதக்க” சிறப்பு விருதினை வித்யோதய பிரிவெனாதிபதி வண.பலங்கொடே சோபித்த தேரர் ஜனாதிபதிக்கு வழங்கினார்.

பிரிவெனா பண்டிதர் பரீட்சையில் 2012ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் சிறப்பு சித்தியை பெற்றுக்கொண்ட வண. மானாப்பிட்டியே வஜிரபுத்தி தேரருக்கு “சுவர்ண முத்திரை” ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. 

மல்வத்து பிரிவின் அநுநாயக்கர் வண. நியங்கொட விஜிதசிறி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் இலங்கை பிரிவெனா கல்வி நிலையத்தின் தலைவர் திஸ்ஸ ஹேவாவிதாரண உள்ளி்ட்ட உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.