கொழும்பு, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளுக்கிடையில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலுடன் லொறி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

லொறியை பின்நோக்கி செலுத்தும்போது சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேற்படி விபத்தில் காயமடைந்தவர்களுள் ரயிலின் மிதி பலகையில் பயணித்தவர்களும் லொறியில் இருந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.