ஹங்வெல்ல, பஹத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள்  அங்கொட லொக்காவின் சகாக்கல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கடந்த 26 ஆம் திகதி ஹங்வெல்லயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 43 வயதான வர்த்தகர் ஒருவரும் 32 வயதான அவரது உதவியாளருமே இவ்வாறு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.