வின்மைன்ட் - அகம் அறிவோம் என்ற தலைப்பில் பூவரசி பதிப்பகத்தின் சார்பாக நூல் வெளியீட்டு விழா கடந்த 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் சென்னை நகரத்தின் HOTEL ROYAL PARK கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமை தாங்கி உரையாற்றினார்.

மேலும் நூலின் முதல் பிரதியை வின்மைன்ட் தோற்றுனரும் அகம் அறிவோம் நூலின் ஆசிரியருமான ஜனகன் வினாயகமூர்த்தி வழங்க தொல். திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.

இந்நூலானது தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது ஓர் சிறப்பம்சமாகும். பூவரசி பதிப்பகத்தின் தலைமை இயக்குனர் கவிஞர் திருமதி ஈழவாணியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

“ முயற்சிகள் தவறலாம் ஆனால் முயற்சி செய்ய தவறலாகாது“ என்னும் தொனிப்பொருளில் 195 ஊக்கமூட்டும் வாசகங்களையும் 9 கட்டுரைகளையும் உள்ளடக்கிய இந்நூலானது இலங்கையிலும் BMICH இல் நடைபெற்ற IDM NATIONS CAMPUS பட்டமளிப்பு விழா 2019 ன் போது 1300 க்கு மேற்பட்ட பட்டதாரிகள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் அகம் அறிவோம் நூலை ஜனகன் வினாயகமூர்த்தி வெளியிட பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியும் WAYAMBA பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பேராசிரியர் E.M.P. Ekanayake பெற்றுக்கொண்டார்.

மேலும் இந்நூலின் ஆசிரியர் ஜனகன் வினாயகமூர்த்தி இந்நூலை “ உங்கள் வாழ்க்கையின் தோழன்“ என கூறுகின்றார். அதாவது வாழ்க்கையில் ஒரு தோழன் எவ்வாறு இருக்க வேண்டுமென்றால் நாம் துவண்டு போகின்ற சந்தர்ப்பத்தில் எங்களுக்கு கை கொடுப்பவனையே தோழன் என்றழைப்போம் அவ்வாறே இந்நூலும் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் என்கிறார்.

இந்நூலின் பிரதியை amazon.com, தமிழ்நாடு மற்றும் இலங்கையின் முன்னணி புத்தகசாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவுக்கு +94 77 336 7080 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.