சேலையில் புத்தரின் உருவம் ; தமிழ் பெண்ணுக்கு நடந்த அவலம்

Published By: Digital Desk 4

29 Aug, 2019 | 04:24 PM
image

திருகோணமலை பொது பஸ்நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்கு பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் அணிந்திருந்த சேலையால் இன்று மதியம் குறித்த பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டது.

குறித்த பெண் தனது பிள்ளையுடன் வயதான பெண்ணெருவருமாக திருகோணமலை நகரிற்கு  ஆலய வழிபாட்டிற்காக வந்தபோதும் அவர் புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்திருந்ததனால் இப்பதற்றநிலைமை ஏற்பட்டது.

குறித்த சேலையில் பொறிக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் உருவத்தைக் கண்ட சில பெரும்பான்மையினத்தவர்கள் இதுதொடர்பாக பலருக்கும் அறிவித்ததுடன் குறித்த பெண்ணை சுற்றிவளைத்து கூடியதுடன் குறித்த சேலை தொடர்பாக  பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் பஸ் நிலையத்தில் நின்ற பொலிசாரும் குறித்த இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் பிரதான பொலிஸ் நிலயத்திற்கு முன்பாகவுள்ள விகாரையின் பௌத்ததுறவி தலமையிலான பலரும் குறித்த இடத்தில் கூடியதுடன் பெண் மீது மனம் புண்படியாகும் விதமான  கருத்துக்களை வெளியிட்டதுடன் திருகோணமலை பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தனர்.

அதுமட்டுமின்றி தமது புத்த பெருமானை பொறித்த சேலை அணிந்த பெண்ணிற்கு தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த பிள்ளை மற்றும் இரு பெண்களையும்  பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

குறித்த பெண்கள் பொலிஸ் வண்டியில் அழைத்து செல்லப்பட்டனர். பஸ் நிலயத்தில் இந்நடவடிக்கையை அதிகளவிலான மக்கள் பௌத்த ஆதரவாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை பிரதான பொலிஸ் நிலையப் பொலிசார் மேற்கோண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22