நாட்டின் அரச பல்கலைக்கழகங்களில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. 

அதற்கமைய, 99 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், புதிதாக 22 பீடங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, மருத்துவபீடங்களுக்கு வருடாந்தம் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 160 இனால் அதிகரிக்கப்படும் என்றும் அவ்வாணைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.