(நா.தனுஜா)

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் இரு பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

அதேவேளை கொழும்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள காணாமல்போனோர் அலுவலகத்தில் நாளைய தினம் பிற்பகல் 1.30 மணி தொடக்கம் 4 மணிவரை ஏற்பாடுசெய்துள்ளது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை அவர்களது உறவினர்கள் நினைவுகூர முடியும். உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் இம்முறை விரிவான விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவில்லை என்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.