திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கன்னியா தொடர்பிலான வழக்கு வாதப்பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது. 

கடந்த ஜூலை மாதம் 19ம் திகதி திருகோணமலை சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் இவ் வழக்கினை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

இவ் வழக்கில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், எதிர் மனுதாரர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினர். கலந்து கொண்டனர்