இலங்கை இனப்­ப­டு­கொ­லைக்கு காரணம் தி.மு.க. சர்­வ­தேச விசா­ர­ணைக்கு தூண்­டி­யது அ.தி.மு.க.

Published By: Raam

14 May, 2016 | 11:35 AM
image

இலங்கை இனப்­ப­டு­கொ­லைக்கு காரணம் தி.மு.க. ஆகும். இந்தப் படு­கொ­லையைச் செய்­த­வர்­களை சர்­வ­தேச விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த தூண்­டி­யது அ.தி.மு.க. ஆகும் என்று தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா தெரி­வித்­துள்ளார். திரு­நெல்­வே­லியில் இடம்­பெற்ற பிர­சார கூட்­டத்தில் கலந்து கொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, வாக்கு கேட்டு வரும் தி.மு.க.-–காங்­கிரஸ் கூட்­ட­ணியை விரட்­டி­ய­டி­யுங்கள். இரு கட்­சி­களும் தமி­ழ­கத்­துக்கும் தமி­ழர்­க­ளுக்கும் தீமை­களை மட்­டுமே செய்­துள்­ளன.

இலங்கை இனப்­ப­டு­கொ­லைக்கு காரணம் தி.மு.க. ஆனால், இந்தப் படு­கொ­லையைச் செய்­த­வர்­களை சர்­வ­தேச விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த தூண்­டி­யது அ.தி.மு.க. ஆகும். அதே­போல கச்­ச­தீவு தாரை­வார்க்­கப்­பட உடந்­தையாக இருந்­தது தி.மு.க. ஆனால், கச்­ச­தீவை மீட்கப் பாடு­ப­டு­வது அ.தி.மு.க.

தமி­ழக மீன­வர்கள் சுட்­டுக்­கொல்­லப்­ப­டும்­போது வேடிக்கை பார்த்ததோடு, அவர்கள் பேரா­சைக்­கா­ரர்கள் எனப்­ப­ழித்­தது. காவி­ரியின் குறுக்கே அணைகள் கட்ட உறு­து­ணை­யாக இருந்­தது,முல்லைப் பெரி­யாறு பிரச்­சி­னையில் கேர­ளத்­துக்கு சாத­க­மாக நடந்­தது அனைத்தும் தி.மு.க.வே. ஆனால், திற­மை­யான வாதங்­களால் உச்ச நீதி­மன்­றத்தில் வெற்றி பெற்­றதும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அர­சா­ணையில் வெளி­யிடச் செய்­ததும் அ.தி.மு.க. ஆகும்.

தமி­ழ­கத்தில் குடும்ப ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும். நல்­லாட்சி அமைய வேண்டும் என்­ப­தற்­காக கடந்த 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு அமோக ஆத­ரவு அளித்து வெற்றி பெறச்­செய்­தீர்கள். 2011-ஆம் ஆண்டு 54 தலைப்­பு­களில் வாக்­கு­றுதி அளித்து தேர்தல் அறிக்­கையை அ.தி.மு.க. வெளி­யிட்­டது. இவை அனைத்தும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. அடுத்த 5 ஆண்­டு­களில் நாங்கள் நிறை­வேற்­ற­வுள்ள வாக்­கு­று­தி­களை இப்­போது அளித்­துள்ளோம்.

அல்லும் பகலும் தமி­ழக மக்­களின் நலன் கரு­தியே நான் உழைத்து வரு­கிறேன். ஆனால், தி.மு.க. தலைவர் கரு­ணா­நிதி தன் மக்களுக்­கா­கவே உழைப்­பவர். நான், தமி­ழக மக்­க­ளுக்­காக திட்­டங்­களைத் தீட்டி செயற்­ப­டுத்தி வரு­கிறேன். ஆனால், கரு­ணா­நிதி தன் மக்களு­க்­காக திட்­டங்­களைத் தீட்டி செயற்­ப­டுத்­தினார். அரசின் வரு­வாயைப் பெருக்க நான் நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறேன்.

தன் மக்களின் வரு­வாயைப் பெருக்­கவே கரு­ணா­நிதி நட­வ­டிக்கை எடுத்தார். தமி­ழர்­களின் உரி­மையை நிலை­நாட்ட நான் குரல் கொடுத்து வரு­கிறேன். தன் மக்கள் வள­மான இலா­காக்­களைப் பெற மத்­திய அமைச்­ச­ர­வையில் குரல் கொடுத்­தவர் கரு­ணா­நிதி.

தமி­ழ­கத்தை இருளில் மூழ்கச் செய்­தது தி.மு.க. இருண்ட தமி­ழ­கத்தை ஒளி­ம­யமாக்­கி­யது, இல­வ­சங்கள் வழங்கி குடும்ப நலன் பேணி­யது. விலை­யில்லாப் பொருள்கள் வழங்கி மக்கள் நலன் பேணி­யது அ.தி.மு.க.. மக்­களின் நிலங்­களை அப­க­ரித்து, திரைப்­படத் துறையை கப­ளீ­கரம் செய்­தது தி.மு.க. நிலங்­க­ளையும், திரைப்­படத் துறை­யையும் மீட்­டது அ.தி.மு.க.. 2–ஜி, ஏர்­செல்-­மேக்சிஸ், பி.எஸ்.என்.எல். இணைப்பு என கொள்ளை அடித்­தது, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என ஆட்சி நடத்­தி­யது தி.மு.க. ஊழல் இல்­லாத ஆட்­சியை வழங்­கு­வது அ.தி.மு.க. திருக்­கோ­யில்­களில் நடை­பெறும் அன்­ன­தான திட்­டத்தை இரத்து செய்­யவும், அம்மா உண­வ­கங்­களை மூடவும் தி.மு.க. உத்­தே­சித்­துள்­ளது. தி.மு.­க. –-­ காங்­கிரஸ் கூட்­ட­ணிக்கு அளிக்­கப்­படும் எந்த ஒரு வாக்கும் உங்கள் நல­னுக்கு நீங்­களே வைத்துக் கொள்ளும் வேட்டு என்­பதை மறக்கக் கூடாது. எனவே, வாக்கு கேட்டு வரும்­போது தி.மு.க. -– காங்­கிரஸ் கூட்­ட­ணியை விரட்­டி­ய­டி­யுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35
news-image

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பல்டிமோர்...

2024-03-26 15:02:50